இந்த நடிகையின் அம்மா மீண்டும் தாய் ஆனால் அதுவும் 19 வருடம் கழித்து.. யார் அவர் தெரியுமா..?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை நேஹா. இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நாரதன், ஜாக்சன் துரை உள்ளிட்ட சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு என் வீட்டில் விரைவில் ஒரு நல்ல விஷயம் நடக்க போகிறது அதற்கான சரியான நேரம் வரும் பொழுது அதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது என் அம்மா கர்ப்பமாக இருந்தார் என்றும் தற்போது 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த தாகவும் மருத்துவமனையில் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நேஹா 2002ஆம் ஆண்டு பிறந்தவர். அந்த வகையில் தற்பொழுது இவர் 19 வயதாகும் நிலையில் அவருடைய அம்மா  தற்பொழுது இரண்டாவது பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

எனவே மேஹா என் அம்மாவை விட நான் தான் தாயாக உணர்கிறேன் அவளை வளர்க்க ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் தற்போது நேஹாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.