லாக் டவுன் நேரத்திலும் மிகவும் விமர்சையாக கொண்டாடி ஏ.எல்.விஜய் மகனின் பிறந்தநாள்.! வைரலாகும் புகைப்படம்.

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த கிரீடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம் உள்ளிட்ட இன்னும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலாபால் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவர்களுக்கிடையே ஒத்துப்போகாத காரணத்தினால்  இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதன்பிறகு ஏஎல்.விஜய் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 2020ஆம் ஆண்டு இந்த தம்பதியர்களுக்கு மே 30ம் தேதி ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

al vijay 2
al vijay 2

அந்தக் குழந்தைக்கு துருவா என்ற பெயர் வைத்தார்கள். அந்த வகையில் அந்த ஆண் குழந்தையை நேற்று முதல் பிறந்த நாள் என்பதால்  மிகவும் விமர்சையாக அந்த பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்கள். அவ்வப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

al vijay 1
al vijay 1

இதனை அறிந்த ரசிகர்கள் துருவாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது இவர்களுக்கு இன்னொரு குழந்தையும் சில மாதங்களுக்கு முன்பு பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போழுது ஏ.எல். விஜய் ஜெயலலிதாவின் வரலாறு திரைப்படமான தலைவி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

al vijay
al vijay

Leave a Comment