மாஸ்டர் படத்தின் வசூலை வைத்து ஆளுக்கு கூலி கூட கொடுக்க முடியவில்லை – புலம்பும் பிரபல திரையரங்கு உரிமையாளர்.

master
master

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உலக அளவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து படம் வலிமை.  இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்,சென்டிமென்ட்  என அனைத்தும் கலந்த இருப்பதால் வேற லெவல் இருக்கிறது.

படத்தின் கதைக்கு ஏற்றபடி அஜித்துடன் கை கோர்த்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு, புகழ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தற்போது பார்த்து கொண்டாடி வருகின்றனர் மேலும் பொது மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் மட்டுமே வசூல் ரீதியாக 100 கோடியை அள்ளிய உள்ளது வலிமை அதிலும் குறிப்பாக தமிழ் தாண்டி மாற்ற இடங்களான ஹிந்தி,  கர்நாடகா, கேரளா போன்றவற்றிலும் நல்ல வசூல் வேட்டை கண்டுவருகிறது.

அந்த வகையில் ஹிந்தியில் வலிமை திரைப்படம் முதல் நாளில் 50 லட்சமும் அடுத்த நாளில் ஒரு கோடி என தொடர்ந்து வசூலில் கலக்கி வருகிறது ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முதல் நாள் ஹிந்தியில் வெறும் 4 லட்சம் மட்டுமே அள்ளியது. வலிமை திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் 12 மடங்கு அதிகமாக வலிமை திரைப்படம் வசூல் செய்து உள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

master
master

இந்த நிலையில் ஹிந்தி திரையரங்க உரிமையாளர் ஒருவர் வலிமை திரைப்படத்தின் வசூல் சிறப்பாக இருக்கிறது என்றும் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 4 லட்சம் அதை வைத்து கரண்ட் பில் மற்றும் ஊழியர்களுக்கான செலவு கூட கொடுக்க முடியாது. வலிமை நல்ல வசூல் வேட்டை கண்டு வருகிறது என கூறிய கமெண்ட் அடித்துள்ளார்.