தீராத வறுமை கண்முன்னே கணவனை பறிகொடுத்த ஆண்பாவம் பட கருப்பாயி..! மனதை நெகிழ வைத்த சம்பவம்..!

0
aanpavam
aanpavam

தமிழ் சினிமாவில் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படம்தான் ஆண்பாவம் இந்த திரைப்படத்தில் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றால் அது கருப்பாயி கதாபாத்திரம் தான் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

அதுமட்டுமில்லாமல் இவர் சிறந்த நாட்டுப்புற பாடகி என்ற காரணத்தினால் பல்வேறு பாடல்களை இவர் பாடி உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதுகுறித்து அவர் கூறியது என்னவென்றால் ஏழு வயதில் இருந்தே நான் மெட்டு போட்டு பாட ஆரம்பித்து விட்டேன் இதனைத் தொடர்ந்து நான் கலைமாமணி விருது கூட பெற்று உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு புகழ்பெற்ற நமது கருப்பாயி என்று இடிந்து கிடக்கும் வீட்டை கூட சரி பண்ண பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். என்னதான் புகழ் இருந்தும் இவருடைய உடலில் உயிர் மட்டும் தான் தற்போது இருக்கிறது மேலும் கருப்பாயிக்கு தற்போது 75 வயதை தாண்டிவிட்டார்.

மேலும் இவர் நடந்தாலும் பாட்டு பாடுவது அமர்ந்தாலும் பாட்டு பாடுவது என்ற கொள்கையை உடையவர் அதுமட்டுமில்லாமல் இவருடைய தந்தையார் இவரை படிக்க வைக்காமல் சாணி அள்ளுவது மாடு மேய்கிறது போன்ற வேலைகளையே கொடுத்தார் அந்த வகையில் ஆடு மாடு மேய்க்கும் போது வாய்க்கு வந்ததை பாடலாக பாடிய நமது நடிகை சிறந்த பாடகியாக திறந்துவிட்டார்.

மேலும் கருப்பாயி ஒப்பாரி பாடல் பாடுவதில் வல்லவர். அந்தவகையில் எம்ஜிஆர் ராஜீவ் காந்தி போன்ற பிரபலங்கள் மறைவிற்கு கூட இவர் ஒப்பாரி பாடல் பாடியது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.  மேலும் கருப்பாயி கணவன் நல்ல படித்தவர் அதுமட்டுமில்லாமல் கொல்லங்குடி கிராமத்தில் கணக்குப் பிள்ளையாக இருந்து வந்தவர்.

மேலும் நான் தற்போது இப்படி நாட்டுப்புறபாடல் பாடுவதற்கு முக்கிய காரணம் என்னுடைய கணவர் தான் மேலும் ஆல் இந்தியா ரேடியோவில் எங்களை வரச்சொல்லி கடிதாசி மேல் கடிதாசி போட்டார்கள் அதற்காக நாங்கள் செல்லும் பொழுது போகிற வழியில் விபத்து ஏற்பட்ட என் கண் முன்னாடியே என் கணவர் போய்விட்டார்.

karuthaayi-1
karuthaayi-1

அதுமட்டுமில்லாமல் என் வயித்துல பொறந்ததும் போயிடுச்சு. மேலும் ஆண்பாவம் திரைப்படம் தான் நான் நடித்த முதல் திரைப்படம் ஆகும் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து இருந்தேன் ஆனால் அதில் சம்பளம் கொடுத்தவர்களை விட ஏமாற்றியவர்கள் தான் அதிகம்.

மேலும் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு ஊருக்கு போங்க பணம் அனுப்பி விடுவார்கள் என நானும் பிறகு பணம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்து இருப்பேன் ஆனால் இதுவரை யாரும் எனக்கு பணம் அனுப்பியது கிடையாது மொட்டை கடுதாசி அனுப்பியவர்கள் தான் அதிகம்.