வணங்கான் படபிடிப்பில் நடிகையை அடித்த நபர்.! வெளியான பரபரப்பு தகவல்…

0
vanaangan
vanaangan

வித்தியாசமான கதைகளை கையாளும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் பாலா இவர் தற்போது வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் முன்னதாக நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வந்தார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக சூர்யா அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு வணங்கான் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட மேலும் வணங்கான் திரைப்படத்தை தற்போது இயக்குனர் பாலா அவர்கள் அருண் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இந்த படத்திற்கு கதாநாயகியாக கீர்த்தி செட்டியை ஒப்பந்தம் செய்த நிலையில் நடிகையையும் இயக்குனர் பாலா அவர்கள் மாற்றிவிட்டார். இதனை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதற்காக கேரளாவில் இருந்து ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு துணை நடிகர் மற்றும் நடிகைகளை வணங்கான் படப்பிடிப்பில் பங்கேற்க வைத்து வருகிறார். இந்தத் துணை நடிகைகளில் ஒருவர்தான் லிண்டா. இதனை தொடர்ந்து இந்த படத்திற்காக மூன்று நாட்களுக்கு ஒன்பது துணை நடிகைகளை ஜிதின் அழைத்து வந்திருக்கிறார்.

அவர்களுக்கு 22.600 ரூபாய் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார் இதை கேட்கப்போன லிண்டாவை ஜிதின் கடுமையாக தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த லின்டா தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் லின்டா அவர்கள் புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது இந்த தகவல் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணை நடிகை லிண்டாவிர்க்கு கன்னத்தில் சிறிய காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இயக்குனர் பாலா அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.