கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலிருந்து வெளியான முக்கிய காட்சி.! வைரலாகும் வீடியோ.

ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றி பெற்று விட்டால் அதனை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு கொஞ்சப்பன் என்ற படத்தை தமிழ் ரீமேக்காக உருவாக்கி வருகிறார்கள்.

தமிழில் கூகுள் குட்டப்பன் என்று பெயர் வைத்து இத்திரைப்படத்தினை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்,ஆர்கே செல்லுலாய்டு மற்றும் குளோபல் என்டர்டைன்மென்ட் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்து வருகின்றது. பிறகு அறிமுக இயக்குனர் சவாரி மற்றும் சரவணன் அவர்கள் இயக்கியவுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இந்த திரைப்படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் மற்றும் யோகிபாபு ஆகியோர்கள் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து ரோபோ ஒன்றும் இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. பிறகு ஜிப்ரான் இந்த படத்தின் இசை அமைப்பாளர், சமிபத்தில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது சில பாடல்களும் வெளிவந்த டிரெண்டாகியுள்ளது.

இவ்வாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் ரிலீஸ் செய்வதற்கான பணிகளை படக்குழுவினர் மிகவும் விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். அந்தவகையில் வருகின்ற மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.