என்னுடைய திருமணம் தள்ளி கொண்டே போவதற்கு முக்கியக் காரணம் இதுதான் – மனம் திறந்த பிரியா பவானி சங்கர்.!

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் அதனால் மீடியா உலகம் எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்திருந்தார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.

தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் தனது சம்பளத்தை மட்டும் உயர்த்தாமல் இருப்பதால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு ரொம்ப பிடித்த நடிகையாக இவர் இருக்கிறார் டாப் நடிகைகளை விட பிரியா பவானி சங்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது ஏனென்றால் அழகாகவும் இருக்கிறார்.

சம்பளமும் கம்மி என்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன இந்த வருடத்தில் மட்டுமே 10க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் படங்களில் நடித்தாலும் மீதி நேரங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து அசத்துகிறார்.

மேலும் ரசிகர்களுடன் சமூகவலைத்தள பக்கத்தில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். பிரியா பவானி சங்கரும், ராஜவேல் இருவரும் பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர் காரணம் கல்லூரியை முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்தனர் சின்ன திரையில் வாய்ப்பு கிடைத்ததால் அப்போது திருமணம் செய்ய முடியாமல் போனது  பின் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்ததால் திருமணம் செய்யாமல் போனதால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் பிரியா பவானி சங்கர் கல்யாணம் தள்ளிக் கொண்டே போவதாக கூறப்படுகிறது.