பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய பிரபலம் – என்ன காரணம் தெரியுமா.? பரபரப்பு செய்தி.

0
big-boss
big-boss

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 5 கோலாகலமாக தொடங்கப்பட்டு வென்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இதனை தொடர்ந்து 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசானையும் கமல்ஹாசனை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்க்காத மற்றும் நமக்குத் தெரியாத பல பிரபலங்கள் இருக்கின்றனர்.  இதில் சில முகங்கள் மட்டுமே மக்களுக்கு பரீட்சயமான முகங்கள் மற்ற முகங்கள் பிக் பாஸ் சீசன் 5 யின் மூலமே மக்களுக்கு தெரிய வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 நபர்கள் கலந்து கொண்டனர்கள்.

அவர்கள் விஜே பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ராஜி ஜெயமோகன், பாவனி ரெட்டி, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஸ்ருதி, அக்ஷரா, அபிஷேக் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது கடந்த சில நாட்களாக பிக்பாஸில் இருக்கும் பிரபலங்கள் லக்சரி பட்ஜட் டாஸ்கிற்காக தங்கள் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் குறித்து பேசி வருகின்றனர்.

அதில் சிலர் கூறிய விஷயங்கள் மக்களை மிகவும் அழவைத்து விட்டது. இதில் பாவனி ரெட்டி தன் கணவன் இறந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு கூறினார் மற்றும் நமிதா மாரிமுத்து அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றியும் கூறினார்.

தற்போது பிக்பாஸ் குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியிலிருந்து சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா மாரிமுத்து வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. இச்செய்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

namitha marimuthu
namitha marimuthu