அஜித்தை “பில்லா” படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்த முக்கிய பிரபலம்.. அட சூப்பர் நியூஸா இருக்கே..

சினிமா உலகில் ரீமேக்ஸ் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் 1980 ஆம் ஆண்டு ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பில்லா இந்த படத்தில் கே பாலாஜி, ஸ்ரீபிரியா, தேங்காய் சீனிவாசன் உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர் இந்த படம் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது.

இந்த படத்தினை 27 வருடம் கழித்து இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து எடுத்தார். இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து நயன்தாரா, நமீதா, ஆதித்யா, ரகுமான், பிரபு, சந்தானம், ஜான் விஜய், அஜித் கான் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மேலும் அஜித் கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இது அமைந்தது. இந்த திரைப்படத்தில் எப்படி தேர்வானார் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இயக்குனர் விஷ்ணுவர்தன் ரஜினி நடித்த பில்லா படத்தை 27 வருடங்கள் கழித்து ரீமேக் செய்ய முடிவு செய்தார் இந்த படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பில்லா வேடத்திற்கு இப்பொழுது அஜித் தான் சரியாக இருப்பார் என கூறினாராம்.. அதுமட்டுமில்லாமல் அஜித்தை தொடர்பு கொண்டு நீ படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனவும் கூறினாராம்.. இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. சினிமாவில் ஒரு கட்டத்தில் விஜய் இடம் அஜித் தோல்வியை தழுவி இருந்தார் கேரியரே முடிந்துவிடும் தருவாயில் தான் இருந்தது.

ரஜினி பில்லா படத்தின் சமயத்தில் அவருக்கு இதே நிலைதான் .. அதை தொடர்ந்து பில்லா படம் தான் அவரது வாழ்க்கையை மாற்றியது அதனால் அதே நிலைமையில் இருக்கும் அஜித்திற்கு இந்த பட வாய்ப்பினை ரஜினி ஏற்படுத்திக் கொடுத்தாராம் உடனே அஜித் ஓகே சொல்லி நடித்தாராம்..

Leave a Comment