தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய பிரபலம்..! ஆக்சன் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரல் விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த ஒவ்வொரு படங்களுமே வெற்றி படங்களாக மாறியதால் தற்பொழுது அவர் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இவர் கடைசியாக எடுத்த விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக 410 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயுடன் கை கோர்த்து தளபதி 67 திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். அண்மையில் பூஜை போடப்பட்டது வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் சொல்லி இருந்தார்.

ஆனால் விஜயுடன் இணைந்து யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதியான தகவல் வெளிவராமல் இருந்தது அவ்வப்போது ஒரு சில டாப் நடிகரின் பெயர்கள் அடிபட்டுக்கொண்டே இருந்தன இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு பிரபலம் தானாகவே முன்வந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறேன் என்பதை ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சர்யதை கொடுத்துள்ளது.

அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.. தமிழ் சினிமா உலகில் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் மன்சூர் அலி கான்.. கடந்த சில வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில்..

லோகேஷ் கனகராஜ் இவரை நடிக்க வைக்க உள்ளார் இதனை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் உறுதிப்படுத்தி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் நான் விஜய் உடன் 10 படம் பண்ணி இருந்தாலும் சமீபகாலமாக படம் பண்ணவில்லை.. இப்படியான சூழ்நிலையில் தற்பொழுது அவருடன் படம் பண்ண இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Comment