தளபதி 67 படத்தில் நான் நடிப்பது உறுதி – பேட்டியில் உளறிய முக்கிய பிரபலம்..! யாரு டா அது.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இவர் தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் லிஸ்டிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது கமலின் விக்ரம் திரைப்படம் கடைசியாக 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் தற்பொழுது தளபதி 67 படத்தை எடுக்க முனைப்பு காட்டி வருகிறார் அதற்கான கதை விவாதத்தில் தான் ஈடுபட்டு வருகிறார் என சொல்லப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது.

மேலும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு பேர் நடிக்க இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் கசிந்தன. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி 67 படம் குறித்து சொல்லி உள்ளார். லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் தன்னை நடிக்க அழைத்தார்.

ஆனால் அது முடியாமல் போனதால் அடுத்த படத்தில் நடிக்க அழைத்திருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் வெளிப்படையாக பேசி உள்ளார். இவரே இப்படி சொல்லி உள்ளதால் தளபதி 67 படத்தில் கௌதம் மேனன்  நடிப்பது கன்ஃபார்ம் என உறுதிப்படுத்தப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment