“பீட்சா” படத்தை தவறவிட்ட முக்கிய நடிகர்கள்..! கடைசியில் விஜய்சேதுபதியிடம் தஞ்சம் அடைந்தது எப்படி..? உண்மையை சொன்ன தயாரிப்பாளர்..!

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட அதற்கு ஏற்றார் போல புது முக நடிகர்களும் தன்னை அப்டேட் செய்து கொண்டு ஓடுகின்றனர்.  அவர்களைத் தொடர்ந்து காலத்திற்கு ஏற்றவாறு புது முக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிகம் தென்படுகின்றனர். அப்படி ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வெற்றி கண்டுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல சி வி குமார்  தான்.

இவர் தலைமையில் சொந்தமாக திருகுமரன் என்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படத்தை தயாரித்திருந்தார் இந்த படம் வரவு, செலவு எவ்வளவு என்று விளக்கமாக யூடியூப்ல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சி வி குமார் முதலில் அட்டகத்தி என்னும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் அதனைத் தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா போன்ற படங்களை தயாரித்து நல்ல தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் இவர் தயாரித்த படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

சி வி குமார் கார்த்திக் சுப்புராஜின் பீட்சா கதையை கேட்டு தயாரிக்க முன் வந்தார் இந்த கதையை பிரசன்னா, வைபவ் மற்றும் நடிகை ஓவியா போன்ற ஆகியவர்களிடம் சொல்லிய போது யாரும் இந்த கதையில் நடிக்க முன்வரவில்லை.. சி வி குமார் தற்செயலாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சந்தித்து அவரிடம் பீட்சா படத்தின் கதையை சொன்ன பொழுது கதை நல்லா இருக்கு நானே தயாரிக்கிறேன் இந்த கதையில் சித்தார்த் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லிவிட்டார்.

இதனால் தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் இந்த கதையில் சித்தார்த்தை நடிக்க வைக்கலாமா என்று கேட்ட பொழுது அதெல்லாம் சரி வராது சார் அவரிடம் சொன்னால் கதையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது விஜய்சேதுபதி நான் இயக்கிய குறும்படத்தில் நடித்திருக்கிறார்.  அதனால் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டார் இந்த தகவலை அறிந்த தயாரிப்பால் ஞானவேல் ராஜா சரிங்க சார் நீங்க விஜய்சேதுபதியை வைத்து நீங்க எடுக்க என்று சி வி குமாரிடம் சொல்லி இருந்தார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 70 லட்சம் இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் எடுக்க வேண்டாம் ஒரு 2 கோடி வரை பட்ஜெட்டை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார் இந்த திரைப்படம் 30 நாள்களில் எடுக்கப்பட்டிருந்தார்கள் இறுதி நாள் ஷூட் அன்று கணக்கு பார்த்த போது வெறும் 50 லட்சம் தான் செலவு செய்திருக்கிறார்கள் முழுமையான தயாரிப்பாளர் செலவு 1 கோடி 42 லட்சம் தான்.. ஆனால் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி கொடுத்து விமர்சன ரீதியாக இந்த படம் நல்ல பாராட்டையும் பெற்று கொடுத்ததாம்

Leave a Comment