தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள்.! அட லிஸ்டில் தல அஜித் படம் இருக்கு பார்த்தீர்களா

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் பல வெற்றிகளை கண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான் தியேட்டர்களில் ஓட்டப்படும், அதில்  ஒரு சில திரைப்படங்கள் மிக நீண்ட நாள் ஓடி சாதனை படைத்துள்ளது. அந்த திரைப்படங்கள் என்னவென்று தற்போது நாம் பார்க்கலாம்.

சந்திரமுகி;- இத்திரைப்படத்தில் ரஜினி, பிரபு, நாசர், வடிவேலு, நயன்தாரா, மற்றும் ஜோதிகா, இவர்கள் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் இது. இந்த திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியாகி 891 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு சாதனை படைத்தது.

chanramuki

 

பயணங்கள் முடிவதில்லை :- இந்த திரைப்படம் இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் சித்தரித்த திரைப்படம் தான் பயணங்கள் முடிவதில்லை, இத்திரைப்படத்தில் மோகன், மற்றும் பூர்ணிமா ஜெயராம் இவர்கள் நடிப்பில் வெளியாகி 565 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற திரைப்படம் தான் பயணங்கள் முடிவதில்லை.

கரகாட்டக்காரன் :- ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும்  செந்தில் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இத்திரைப்படத்தை கங்கை அமரன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியாகி 425 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படம் கரகாட்டகாரன்.

karakattakaaran

மூன்றாம் பிறை :- கமலஹாசன், ஸ்ரீதேவி, சில்க்ஸ்மிதா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைக் கண்ட திரைப்படம்தான் மூன்றாம்பிறை, இத்திரைப்படத்தை இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியாகி 329 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த திரைப்படம் மூன்றாம் பிறை.

சின்னத்தம்பி :- நடிகர் பிரபு மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியாகிய இத் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் முதல்கொண்டு வெற்றி பெற்ற திரைப்படம் தான் சின்னத்தம்பி. இத்திரைப்படத்தினை இயக்குனர் பி வாசு அவர்கள் இயக்கியுள்ளார். இந்த  படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி 356 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

karakattakaaran

பருத்திவீரன் :- அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக், பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், மற்றும் கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் பருத்திவீரன். இந்த படம்  365 நாட்கள் ஓடி ஒரு சாதனை படைத்த திரைப்படமாகும்.

சின்ன கவுண்டர் :- நடிகர் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் சின்ன கவுண்டர். இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியாகி 315 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு சாதனை படைத்துள்ளது.

வால்டர் வெற்றிவேல் :- நடிகர் சத்யராஜ், சுகன்யா, விஜயகுமார், கவுண்டமணி, நாசர், பிரபுதேவா நடிகர்கள் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் வால்டர் வெற்றிவேல். இந்த படத்தை இயக்குனர் பி வாசு இயக்கி 1993ஆம் ஆண்டு வெளிவந்து  250 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்த திரைப்படம்தான் வால்டர் வெற்றிவேல்.

waltar vetrivel

பூவே உனக்காக:- இளைய தளபதி விஜய் மற்றும் சங்கீதா நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் பூவே உனக்காக இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியுள்ளார். இந்தப் படம்  1996ம் ஆண்டு வெளியாகி 286 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது.

வாலி:- தல அஜித் அஜித் நடிப்பில் வெளியாகி ஒரு மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் வாலி இந்த திரைப்படத்தில் அப்பாதான் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கியுள்ளார். இந்தப் படம்1999ம் ஆண்டு வெளியாகி 270 வது நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

vaali

கிழக்கு வாசல் :- ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக், மற்றும் ரேவதி நடிப்பில் வெளியாகி ஒரு வெற்றி பெற்ற திரைப்படம் தான் கிழக்கு வாசல். இந்த திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியாகி 250 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு சாதனை படைத்த திரைப்படம் தான் கிழக்கு வாசல்.

kizhakku vasal

நாட்டாமை:- இத்திரைப்படத்தில் சரத்குமார் அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்து ஒரு மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம்தான் நாட்டாமை இந்த படத்தில் மீனா, மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படம்1994 ஆம் ஆண்டு175 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு சாதனை படைத்துள்ளது.

nattamai

நீ வருவாய் என :- ராஜகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன், அஜித் குமார், தேவயானி போன்ற பிரபலங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படங்கள் நீ வருவாய் என. இந்த படம்1999ம் ஆண்டு வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் தான் நீ வருவாய் என.

Leave a Comment

Exit mobile version