நடிகர் விஜய் உடன் வீடியோ காலில் பேசிய குட்டி ரசிகை.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே படகுழு அறிவித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் டைட்டில் பிரமோ ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வந்ததை தொடர்ந்து இந்த படத்தில் டீசர் அல்லது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தாத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் கடும் குளிரில் கபடமாக்கப்பட்டு வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இப்படி விறுவிறுப்பாகநடைபெறும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகலில் கலந்து கொண்ட மிஸ்கின் மற்றும் கௌதம் வாசுதேவனின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாகவும் அடுத்ததாக கலந்து கொண்ட சஞ்சய் தத்தின் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரத்தின் காட்சி தான் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் பகத் பாசில் இந்த திரைப்படத்தில் இணைவதால் இந்த திரைப்படம் எல்சிவில் இணைய உள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படி லியோ திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தன்னுடைய குட்டி ரசிகை ஒருவருக்கு வீடியோ கால் செய்து அவருடன் நீண்ட நேரம் பேசி காலத்தை கழித்திருக்கிறார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

அதாவது சென்னையை சேர்ந்த அபிதா என்ற குழந்தை என்னை பார்க்க விஜய் அங்கிள் வரமாட்டார என்று ஒரு வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோ எப்படியோ விஜய்க்கு தெரியவே லியோ கெட்டப்பில் அந்த குழந்தைக்கு வீடியோ கால் பேசியிள்ளார் இந்த விடாதான் இணையத்தில் வைரளாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…