The line King : ரசிகர்கள் அனைவரும் தமிழ் படத்தை மட்டும் அல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களையும் விரும்பி பார்க்கிறார்கள், அதேபோல் திரையரங்கில் தமிழ் படங்களைத் தாண்டி மற்ற மொழி படங்கள் வெற்றி நடை போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் அதிக திரையரங்கில் ஹாலிவுட் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கின்றன, சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தி லயன் கிங்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகின்றன.
ஹாலிவுட் திரைப்படங்களின் கதைகளை நாம் எத்தனை முறை பார்த்து இருந்தாலும் அதை மீண்டும் பார்த்தால் வியக்கவைக்கின்றன, அந்தவகையில் ‘தி லயன் கிங்’ திரைப்படமும் நாம் ஏற்கனவே பார்த்த கதைதான் ஆனால் மீண்டும் நம்மளை பார்க்க வைத்துவிட்டது.
இந்த நிலையில் the lion king 3 நாள் முடிவில் வசூல் விவரம் தெரிய வந்துள்ளது, சென்னையில் மட்டும் தி லயன் கிங் 1.46 கோடி வசூலித்துள்ளது, அதேபோல் இந்தியா முழுவதும் மொத்தமாக 54.75 கோடி வசூல் செய்துள்ளது, வெள்ளிக்கிழமை அன்று 11.06 கோடியும். சனிக்கிழமை 19.15 கோடி வசூல் செய்துள்ளது மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 24.54 கோடி வரை வசூல் செய்துள்ளது.