தி லயன் கிங் திரைவிமர்சனம்.!

0
the line king
the line king

தி லயன் கிங் விமர்சனம்

தமிழ் ரசிகர்கள் தமிழ் படங்களை மட்டும் அல்லாமல் அனைத்து மொழித் திரைப்படங்களும் பார்க்கிறார்கள், அந்த வகையில் ஹாலிவுட் படத்திற்கு தமிழர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள தி லயன் கிங் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றி பெற்றதா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட பாகுபலி திரைப்படம் போன்றே இருக்கும், பாகுபலி திரைப்படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தால் எப்படி இருக்குமோ அதுதான் தி லயன் கிங் ஸ்டோரி, ஒரு சிங்கம் காட்டை மிக நல்லமுறையில் ஆண்டு வருகிறது, அந்த சிங்கத்தை சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு, அதன்பின் மகன் குட்டி சிங்கம் பெரியவனாகி சிம்மாசனத்தை எப்படி பிடிக்கிறது என்பதுதான் the lion king. இன்னும் சுருக்கமாக சொன்னால் ராஜா சிங்கம் சூழ்ச்சியில் இறந்துபோக மகன் சிங்கம் வளர்ந்து ராஜ்யத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.

படத்தைப் பற்றி

ராஜா சிங்கம் காட்டை மிகவும் நல்ல முறையில் ஆண்டு வருகிறது அதன் வாரிசுதான் சிம்பா இந்த சிம்பா இளம் வயது கனவுகளுடன் இருக்கிறது, ராஜா சிங்கத்திற்கு ஒரு தம்பி இருக்கிறார் அவர் ராஜ்யத்தை அடைய ஆசைப்பட்டு ராஜா சிங்கத்தை திட்டமிட்டு கொள்கிறான், ஆனால் ராஜா சிங்கத்தை கொன்றது சிம்பா தான் என அனைவரையும் நினைக்க வைக்கிறது, அதனால் சிம்பா காட்டை விட்டு ஓடி வளர்ந்து பெரியவனாகி ராஜ்யத்தை மீட்டெடுக்கிறாது.

the lion king திரைப்படம் பைபிளிலிருந்து தழுவப்பட்டு உருவாக்கப்பட்ட கதைதான், உலகம் முழுவதும் குழந்தைகள் அதிக முறை கேட்ட கதை தான், இருந்தாலும் அதை மீண்டும் இந்த கால தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்துள்ளார்கள் இந்த முறை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்கள், இந்த திரைப்படத்தை டிஸ்னி தயாரிப்பில் ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே நம்பளை உண்மையான காட்டிற்குள் கொண்டு செல்கிறது, குழப்பமில்லாத கதை, மிக எளிமையான கதை, மேலும் படத்தில் உள்ள சிங்கங்கள், குரங்குகள், மான், ஒட்டகச்சிவிங்கி, பன்னி என அனைத்தும் அனிமேஷன் என்பதை யாராலும் நம்ப முடியாது அவ்வளவு துல்லியமாக அனிமேஷன் செய்துள்ளார்கள்.

மேலும் சிங்கத்தின் பார்வையில் அசைவில் இத்தனை உணர்வுகளைக் கொண்டு வர முடியும் என்பதை மிகவும் அழகாக காட்டி உள்ளார்கள், இந்த திரைப்படம் குழந்தைகளுக்கு குதூகலம் கொண்டாட்டம் தான், தி லயன் கிங் படதிற்கு அரவிந்த்சாமி, சித்தார்த், மனோபாலா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, ரோகிணி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்கள் குரல் கொடுத்து உள்ளார்கள்

தி லயன் கிங் = 3/5