ஆரம்பமே ஆட்டகாசமா இருக்கே.! தளபதி-67 leo படைத்த மாபெரும் சாதனை…

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள் அந்த வகையில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் காஷ்மீரில் மட்டுமே இந்த படத்திற்கான படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடத்தப்பட குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது படக்குழு வெளியிட்ட லியோ டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இந்த லியோ டைட்டில் டீசர் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவடைந்த நிலையில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு கழுகு குறியீட்டையும், விஜய் சேதுபதி சந்தானம் கதாபாத்திரத்திற்கு பாம்பு குறியீட்டையும், சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தேள் குறியீட்டையும் வைத்துள்ளார். அதேபோல லியோ படத்தில் விஜய்க்கு சிங்கத்தோட குறியீட்டை வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் லியோ என்ற வார்த்தைக்கு சிங்கம் என்று பொருள் என்றும் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ஃப்ரீ ரிலீஸ் மட்டுமே 246 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படம் வெளியானால் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment