தி லெஜன்ட் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல் வெளியானது.!

தற்போது அறிவியல் துணை கதை படமான டி லெஜெண்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தை ஜே.டி ஜெர்ரி அவர்கள்இயக்கத்தில் தொழிலதிபரான சரவணன் அருள் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஊர்வசி ரவுடேலா, பிரபு, நாசர், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர் பான் இந்தியன் திரைப்படமாக உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்திற்கு UBFC U/A என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபரான சரவணன் அருள் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் விளம்பர வேலை நடைபெற்று இருக்கும்போது சில மணி நேரங்களில் 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்த்துள்ளது.

தி லெஜன்ட் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் விஜயகுமார், சுமன், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பூர்ணிமா பாக்யராஜ், மன்சூர் அலிகான், முனீஸ் காந்த், ராகுல் தேவ், சிங்கம் புலி, மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுடேலாவும் தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும் இந்த படம் தான் நடிகர் விவேக் அவர்களுக்கு இறுதிப் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் வெளியான ஒரு பாடல்  யூட்யூபில் அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர் மத்தில இருந்தாலும் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைவாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Comment

Exit mobile version