10 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது தி லெஜன்ட் டிரைலர்.! அதுவும் முதல் இடத்தை பிடித்துள்ளதா.?

தமிழ் சினிமாவில் முதல் முதலாக தி லெஜன்ட் திரை படத்தில் அறிமுகமாகிறார் லெஜண்ட் சரவணன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜன்ட் இந்த படத்தில் இருந்து வாடிவாசல் என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் டஜன் சரவணனுடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை ராய் லட்சுமி அவர்களும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்குள் சுமார் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கு மேல் பார்வையாளர்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த டிரைலர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன் அவர்கள் ஒரு சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.

the legend

இந்தப் படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருப்பதால் மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.அவன் பிறகு இந்தத் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version