“நானே வருவேன்” படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கி முன்னணி நிறுவனம்..! எது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்த நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் இவரது நடிப்பு சூப்பராக இருப்பதோடு அந்த படங்கள் வெற்றியை ஈசியாக பெறுகின்றன. அந்த வகையில் மாறன் படத்தை தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தனுஷ் நடித்து உள்ளார்.

அந்த வகையில் வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தனுஷின் சினிமா மார்க்கெட் உச்சத்தை தொடும் என சொல்லப்படுகிறது ஏற்கனவே தனுஷ் தமிழைத் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் இன்னும் உயரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள படங்களிலேயே நானே வருவேன்  படத்தை தான் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி உள்ளனர். காரணம் இந்த திரைப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அவரது அண்ணன் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார் மேலும் இதில் வில்லனாக செல்வராகவும் நடித்துள்ளதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தாணு தயாரித்து உள்ளார்.

நானே வருவேன் படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நானே வருவேன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெகு விரைவிலேயே வெளிவரும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version