கோயம்பேடு சந்தையை மூடியதால்.! காய்கறிகளின் விலைஉயர்வு.! எந்த காய்கள் எவ்வளவு தெரியுமா.?

கொரோனா வைரஸ் தற்பொழுது இந்தியாவில் அதிகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அது போல தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுவதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் சந்தை கடந்த 5 ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டது.

இதனையடுத்து சென்னைக்கு வர வேண்டிய காய்கறி வரத்து முற்றிலும் முடங்கியது இதனால் கையில் இருப்பு உள்ள காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இருப்புள்ள காய்கறிகள் குறைவாக இருப்பதால்  வியாபாரிகள் நேரத்திற்கு ஏற்றவாறு போல காய்கறிகளின் விலையை உயர்த்தி விற்று வருகின்றனர் .இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது பச்சைமிளகாய் வரப்பு மிக குறைந்துள்ளதால் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது மிளகாய் கிலோ 80 டோ 90 ரூபாய்க்கும் அதே போல இஞ்சி 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளான தக்காளி ஒரு கிலோ 4 ரூபாய்க்கும், வெங்காயம் சின்ன வெங்காயம் 80 முதல் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 50 ரூபாய்க்கும், முள்ளங்கி 50 ரூபாய்க்கும், கேரட் 50 பின்ஸ் 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

image
image

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் தற்பொழுது வாழ்வாதாரத்தை இழந்து உள்ள மக்கள் இதுபோன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment