ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கே ஜி எஃப் 3 படம் – எப்பொழுது ரிலீஸ்ஸாகும் தெரியுமா.?

0

அதளபாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை மீட்டெடுத்த படம் என்றால் அது கேஜிஎப் தான். பிரசாந்தி நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான கே ஜி எஃப் படம் எதிர்பாராத அளவிற்கு ஆக்சன் சென்டிமெண்ட் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

உடனடியாக அதன் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு பல்வேறு தடைகளை தகர்த்தெரிந்து இரண்டு வருடங்கள் கழித்து கே ஜி எஃப் 2 கடந்த மாதம் வெளியாகியது. இந்த படம் முந்தைய படத்தை விட மாஸ் சீன்கள் அதிகம் ஆக்சன், சென்டிமெண்ட் வழக்கம்.

போல இருந்ததால் கே ஜி எஃப் 2 இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை கே ஜி எஃப் 2 திரைப்படம் உலக அளவில் சுமார் 1200 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அண்மையில் வெளிவந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக கேஜிஎப் 2 மாறிக்கொண்டிருக்கிறது.

கே ஜி எஃப் 2 படம் முடியும் பொழுது அதன் மூன்றாவது பாகம் உருவாக்கும்படி காட்டியிருந்தனர் இதனால் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிகரித்துள்ளது. கேஜிஎப் 3 திரைப்படம் எப்போது வெளிவரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது.

கேஜிஎப் மூன்றாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது இந்தப் படம் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட பல்வேறு படத்தின் கதாபாத்திரங்களை கேஜிஎப் 3 – ல் கொண்டு வந்து ஒரு சூப்பரான படமாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.