பத்து தல படத்தில் இடம் பெற்றிருக்கும் ஐட்டம் பாடல் இன்று வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் குழந்தையிலிருந்து தற்போது வரையிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு நடிகர் சிம்பு அவர்கள் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்டார். இந்த நிலையில் அவருடைய பட வாய்ப்பும் மற்றும் மார்க்கெட் சரியா ஆரம்பித்தது இதற்கு முக்கிய காரணம் அவர் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டது மற்றும் அவருடைய உடல் எடை அதிகரித்தது தான்.

ஒரு சில ஆண்டுகள் கழித்து நடிகர் சிம்பு அவர்கள் தன்னுடைய உடல் எடையை மிகவும் அதிகமாக குறைத்து ஒல்லியாக மாறி தற்போது மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவே அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தார்.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகிய நிலையில் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 30ஆம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது.

விடுதலை திரைப்படமும் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதனால் இந்த இரண்டு படங்களும் நேரடியாக மோதிக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது அந்த பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஐட்டம் பாடல் இன்று 5.04 மணிக்கு வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஐட்டம் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version