பிளேயிங் லெவனை மாற்றியதால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது – கோலியை சாடும் முன்னாள் வீரர்.?

இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்திய அணி மீதி இருக்கின்ற போட்டிகளில் அதிக ரன்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில அணிகள் தோல்வியை தழுவினால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி போட்டியிக்கு செல்லும் வாய்ப்பைப் பெற முடியும் என ஒரு சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்திய அணி பாகிஸ்தானுடன் மோசமாக தோற்றது அதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து நேற்று இந்தியா நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து. இத்தனை அடுத்து களம் கண்ட இந்திய அணி. ஆனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஆரம்பத்திலேயே காத்திருந்தது.

எப்பவும் போல கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்ரோகித் சர்மாவை உட்கார வைத்துவிட்டு இஷன் கிஷன் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர் மூன்றாவதாக ரோகித் சர்மா களம் இறங்கினார். அதுவே இந்திய அணிக்கு தோல்விக்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் எந்த ஒரு வீரரும் சொல்லிக்கொள்ளும்படி சிறந்த ஆட்டத்தை  வெளிப்படுத்தவில்லை இந்திய அணி ஒருவழியாக 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே குவித்தது. இத்தனை எடுத்து ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது. இரண்டு போட்டிகளில் தோற்றதற்கு காரணம் கோலியின் முடிவை என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடைசி போட்டியில் ஏற்கனவே இருந்த பதினோரு வீரர்களை வைத்து விளையாண்டு இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு அணியில் மாற்றத்தைக் கொண்டு வந்த காரணத்தினாலேயே நியூசிலாந்துடனான போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பந்து வீச்சுதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் பலரை சேஞ்ச் பண்ணி இருக்கலாம் ஆனால் பேட்ஸ்மேனை மாற்றியது மிகப்பெரிய தவறு என மறைமுகமாக சொல்லி உள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான்.

Leave a Comment