உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்.! விக்கெட் கீப்பர் கிடையாது.?

World Cup 2023 : உலக கோப்பை 2023 போட்டிகள் தொடங்கி கோலாகலமாக போய்க்கொண்டிருக்கிறது இன்று இந்தியா ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகிறது டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மார்ஷ் களம் இறங்கினர்.

மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவரை தொடர்ந்து ஸ்மித், வார்னருடன் கூட்டணி அமைத்து விளையாடி வருகிறார். போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் போட்டி ஆரம்பித்த சில சில நிமிடங்களிலேயே கோலி ஒரு புதிய சாதனை படைத்துள்ளார் அதாவது உலககோப்பை போட்டியில் விக்கெட் கீப்பர் இல்லாமல் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் முதல் இடத்தை கோலி பிடித்து உள்ளார்.

இந்தப் போட்டியின் பொழுது மிட்சில் மார்ஷ் பேச்சைப் பிடித்து உலக கோப்பை போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் விராட் கோலி முதல் இருக்கிறார்  இதுவரை அவர் 15 கேட்ச் பிடித்துள்ளார் அடுத்து இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே 14  கேட்ச், கபில்தேவ் 12  கேட்ச், சச்சின் டெண்டுல்கர் 12 கேட்ச் பிடித்துள்ளனர்.

kohli
kohli

2023 உலக கோப்பை ஆரம்பித்து இந்திய அணி முதல் மேட்ச்சிலேயே  கோலி ஒரு கேட்சை பிடித்து ஸாதனை படைத்திருக்கிறார் இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது கேட்ச் மட்டுமல்ல ரன் போன்றவற்றிலும் கோலி இந்த முறை சாதனை படைப்பார் என கூறி ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.