“பீஸ்ட்” படத்தைப் பார்த்தவருக்கு கத்திகுத்து “கேஜிஎஃப் 2” படம் பார்த்ததற்கு துப்பாக்கிச்சூடு என ஒரே நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.!

தற்பொழுதெல்லாம் அனைத்து  நடிகர்களுக்கும் ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருந்து வருவதால் அது நன்மையாக இருந்தாலும் சில வழிகளில் தீய்மையானதாகவும் அமைகிறது. அந்த வகையில் நாங்கள் இந்த நடிகரின் தீவிர ரசிகர் என்று கூறி இரு குழுவாக பிரிந்து சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்ததற்கு கத்திக்குத்து என்றும், கேஜிஎப் 2 திரைப்படத்தை பார்த்ததற்கு துப்பாக்கிச்சூடு என்றும் ஒரே நாளில் இரண்டு பெரும் சம்பவங்கள் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சென்னையில் உள்ள அம்பத்தூரை சேர்ந்த லோகேஷ் கனகராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் ஒரு கும்பலுடன் சண்டை போட்டுள்ளார். அந்த மர்மக் கும்பல்  முன் விரோதம் காரணமாக லோகேஷ் பணி முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் மர்ம கும்பலை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு இதனை பற்றி தீவிரமாக ஆராய்ந்த நிலையில் படம் பார்க்கும் போது ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பிறகு அதே போல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கேஜிஎப் 2  திரைப்படத்தை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் உட்கார்ந்திருந்தவர் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்தவரின் மீது கால் பட்டுள்ளது எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது பின் இருக்கையில் இருந்தவர் துப்பாக்கி எடுத்து முன் இருக்கையில் உட்கார்ந்தவரை சரமாரியாக சுட்டு தள்ளியுள்ளார்.

kgf movie 2

இதனால் படுகாயமடைந்த நபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  பிறகு துப்பாக்கியால் சுட்டவர் தலைமறைவாகி இருந்து வருவதால் போலீசார் தொடர்ந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இவ்வாறு ஒரே நாளில் பீஸ்ட் படம் பார்த்தவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.கே ஜி எஃப் 2 படம் பார்த்தவர்கள் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Exit mobile version