பிரபல நடிகரை விக் இல்லாமல் பார்த்தேன் அடையாளமே தெரியல.! பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்…

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமானம் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரபல நடிகர் ஒருவரை விக் இல்லாமல் பார்த்தால் அடையாளமே தெரியாது என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதாவது பயில்வான் ரங்கநாதன் கூறியது என்னவென்றால் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியை விக் இல்லாமல் பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது என்று கூறியிருக்கிறார். ஒரு படத்தில் நடிகர் கவுண்டமணி நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து பயில்வான் ரங்கநாதனும் நடித்து வந்தார்.

அப்போது எதுவுமே கவுண்டமணியை பற்றி ரங்கநாதனுக்கு தெரியாது. அந்த நேரத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் கவுண்டமணி சென்னை திரும்பி இருக்கிறார் அப்போது ரயிலில் இருந்து இறங்கிய கவுண்டமணியை பார்த்தும் பார்க்காமல் சென்று இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஆனால் பயில்வானை பார்த்த கவுண்டமணி அவரை அழைத்து என்னப்பா நான் வந்து இறங்கி இருக்கேன் ரசிகர்களுக்கு தான் என் அடையாளம் தெரியல ஆனா உனக்குமா என்ன அடையாளம் தெரியல என்று கூறியிருக்கிறாராம் கவுண்டமணி.

இதைதான் நடிகர் மற்றும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் கவுண்டமணியை விக் இல்லாமல் பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் அதாவது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தலைவர் விக் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்கிறார் என்று பெருந்தன்மையாக கூறி வருகிறார்கள். சினிமாவில் விக் உடனும் நிஜ வாழ்க்கையில் விக் இல்லாமலும் இருக்கிறார் நடிகர் ரஜினி என்று பெருமைபட்டு வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில நடிகர்கள் எங்கு நமக்கு வழுக்கை விழுந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று எண்ணி விக் வைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள் ஆனால் பொதுவாக பல மனிதர்களுக்கு நார்மலாக வழுக்கை விழுவது சகஜம் தான் அதிலும் குறிப்பாக திரையுலகில் இருக்கும் நடிகர்கள் பவர்ஃபுல் லைட்டிர்க்கும் முன்பு நடிக்கும்போது அவர்களுடைய முடிக்கோட்ட தான் செய்யும் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment