சம்பள விஷயத்தில் நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு சம்பளம் வாங்கும் நடிகைகள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் பல மொழிகளில் நடித்து வருகின்றார்கள். இருப்பினும் இவர்களுக்கு ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று இதுவரைக்கும் யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இதில் பத்தாவதாக கீர்த்தி சுரேஷ் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கென ஒரு புகழ் மற்றும் ஒரு தனி இடம் கொடுத்தது தமிழ் சினிமா தான். தமிழ் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் இவருடைய புகழ் மிகவும் அதிகரித்தது, இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அதில் ஒன்றுதான் மகாநதி இந்த திரைப்படம் இவருக்கு நேஷனல் விருது பெற்றுக்கொடுத்தது. கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்திற்கு  25 லட்சத்திற்கும் மேலாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

keerthi suresh
keerthi suresh

ஸ்ரீதிவ்யா இவரும் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் பிறகு தான் இவரின் புகழ்அதிகரித்தது.நடிகை ஸ்ரீதிவ்யா ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்சமாக 30 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஹன்சிகா மோட்வானி இவர் ஆரம்ப காலத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி தான் இவர் அறிமுகமானது தெலுங்கு திரைப்படத்தில் தான் அந்த படமும் வெற்றி பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மிகவும் வெற்றி வெற்றி பெற்றது. ஹன்சிகா ஒரு திரைப்படத்திற்கு 70லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

hansika motwani
hansika motwani

திரிஷா இவர் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். பின்னர் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நம்பர் ஒன்றாக இருந்த திரிஷா மார்க்கெட் இழந்து இருந்தாள் ஆனால் மறுபடியும் 96 என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியுள்ளார். திரிஷா அவர்கள் ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

trisha
trisha

காஜல் அகர்வால் இவரும் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் பல வெற்றி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். இவர் ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

kajal agarwal
kajal agarwal

சமந்தா இவர் ஆரம்ப காலத்தில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அதன்பிறகு இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியை மட்டுமே கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். சமந்தா அவர்கள் ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

samantha
samantha

தமன்னா இவர் பல மொழிகளில் நடித்து வரும் ஒரு நடிகை. ஒரு மொழி திரைப் படத்தில் நடிப்பதற்காக அந்த மொழியை முழுசாக கற்றுக்கொண்டு பிறகுதான் அந்த திரைப்படத்தில் நடிப்பார். அப்படி தனது முழு திறமையால் பிரபலமான தமன்னா ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

tamanna
tamanna

சுருதி ஹாசன் இவர் என்னதான் உலகநாயகனின் மகளாக இருந்தாலும் இவருக்கென ஒரு தனி பெயர் சினிமாவில் உள்ளது. இவர் நடிகை மட்டுமல்லாமல் இசை தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சுருதிஹாசன் அவர்கள் டோலிவுட் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் ஒரு திரைப்படத்திற்கு 1.5கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

அனுஷ்கா செட்டி இவர் ஏற்கனவே நிறைய சம்பளம் வாங்கக்கூடிய ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால் பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இன்னும் இவருடைய புகழ் அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அனுஷ்கா செட்டி ஒரு திரைப்படத்திற்கு 1/2 முதல்1/4 வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

anushka shetty
anushka shetty

இந்த வரிசையில் நம்பர்-1 ஆக இருக்க கூடிய நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். இவர் நடித்த நடிப்பு மற்றும் இவர் கொடுத்த வெற்றி அனைத்துமே நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் இரண்டிலிருந்து, இரண்டரை கோடி வரைக்கும்  சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

nayanthara
nayanthara

Leave a Comment