2022 – ல் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – மூன்றாவது இடத்தில் கமலின் விக்ரம்.! லிஸ்ட்டில் இல்லாமல் போன விஜய்.

அண்மை காலமாக தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோகளின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை ருசிக்க வில்லை. இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், கமல் கூட்டணி இணைந்து விக்ரம் திரைப்படத்தை உருவாக்கியது.

ஒருவழியாக படம் ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியானது படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படத்தில் கதைக்கு ஏற்றபடி பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி, காயத்ரி, ஏஜென்ட் டினா என அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தனர். இது இந்த படத்திற்கு இன்னும் பக்கபலமாக அமைந்தது.

விக்ரம் திரைப்படம் தமிழை தாண்டி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று  சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படம் இதுவரை 350 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது தமிழகத்தில் மட்டுமே 150 கோடி வசூல் செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

விக்ரம் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் குறைந்தபாடு இல்லாமல் இருப்பதால் வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்கள் எது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

இந்த ஆண்டில் கேஜிஎப் 2, அஜித்தின் வலிமை ஆகிய திரைப்படங்கள் தான் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படங்களாக இருந்தவன தற்பொழுது கமலின் விக்ரம் திரைப்படமும் இடம் பெற்றுள்ளது இந்த படம் அதிகம் வசூலித்து தற்போது 3வது இடத்தைப் பிடித்துள்ளது.இச்செய்தியை வர்த்தக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment