பிரபல OTT தளத்தில் வெளியாகப்போகும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

தனது கதையை ரசிகர்களுக்கு வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக பல இயக்குனர்கள் பல்வேறு வித்தியாசமான கதைகளை எழுதி வருகிறார்கள் ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன் இவரது திரைப்படங்கள் எப்போதுமே மக்களுக்கு பிடித்து விடும் என்று கூட கூறலாம் அந்த வகையில் இவரது திரைப்படங்கள் நன்றாக இருக்கும்.

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா உடன் ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார்கள் மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அற்புதமாக இசை அமைத்திருப்பார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக ஓரளவு வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விட்டது அந்த அளவிற்கு திரைப்படத்தின் பாடல்கள் அற்புதமாக இருக்கும்.

ரசிகர்கள் மிக ஆவலுடன் இந்த திரைப்படம் எப்பொழுது OTTதளத்தில் வெளியாகும் என காத்துக் கொண்டிருந்தார்கள் அதனைப் பற்றி தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜீ5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ஒரே கொண்டாட்டத்தில் குதித்து வருகிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment