தன்னை பின்பற்றும் ரசிகர்களுக்கு சூப்பரான மெசேஜ் அனுப்பிய தல.! என்ன சொல்லியுள்ளார் தெரியுமா.?

ajith
ajith

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்து வருபவர் தல அஜித். இவர் ரசிகர் மன்றம் வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு தனது நடிப்பு தனது வேலை தனது குடும்பம் என இருந்து வந்தாலும் ரசிகர்கள் இவரை பார்த்து பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

ஏனென்றால் சினிமாத்துறையில் இதுபோன்ற ஒரு நபரை காண்பது அரிதாகிவிட்டது  மேலும் அஜித் செயல் , நடவடிக்கை ஆகியவை நன்றாக இருந்தது அதையும் தாண்டி தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கும், ரசிகர்களுக்கு மறைமுகமாக செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை உச்ச நட்சத்திரமாக பார்க்கின்றனர்.

அதை உணர்ந்த அஜித் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தையும் ரசிகர்கள் வேற மாதிரி கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் திரை உலகில் 30 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருகிறார் இப்படிப்பட்ட சூழலில் அவர் ரசிகர்களுக்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார் அவர் கூறியுள்ளது.

ரசிகர்கள் அன்பானவர்கள், வெறுப்பவர்கள், நடுநிலையானவர்கள் ஆகிய மூவரும் நாணயத்தின் மூன்று பக்கங்கள் நான் ரசிகர்களின் அன்பையும் வெறுப்பவர்களிடருந்து வெறுப்பையும், நடுநிலையானவர்களின் நியாயமற்ற பார்வைகளையும் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு வாழ விடு என அஜித் அவரது ஸ்டைலில் ரசிகர்களுக்கு செய்தி அனுப்பி உள்ளார்.