பொன்னியின் செல்வன் படத்தை “வெப் சீரிஸாக” எடுக்க ஆசைப்பட்ட பிரபல இயக்குனர் – வெளிவரும் உண்மை தகவல்..

ponniyin selvan
ponniyin selvan

சினிமா உலகில் அண்மை காலமாக உண்மை மற்றும் நாவல் சம்பந்தப்பட்ட படங்களை எடுக்கப்பட்டு வருகிறனர். அந்த படங்களும் மக்கள்  மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரமாண்டமான வெற்றியை பெறுகின்றன அந்த வகையில் இப்போது இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார்.

இதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனம் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது மேலும் படத்தின் வசூலும் எதிர்பார்ப்பதை விட அதிகரித்து காணப்படுகிறது.

முதல் நாளில் மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் ஓட்டு மொத்தமாக 80 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக லைகா நிறுவனம் அதிரடியாக தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 27 கோடி வசூலித்து இருந்தாக  ஒரு தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற நாட்கள் சனி,ஞாயிறு என்பதால் இந்த படத்தின் வசூல் இன்னமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் படம் பற்றி ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது அதாவது பொன்னியின் செல்வன் படத்தை முதலில் ராஜமௌலி தான் எடுக்க ஆசைப்பட்டாராம் அது பற்றிய அவரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார் பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் நான் படித்தேன் அதை படமாக எடுக்கலாம் என முதலில் நினைத்தேன்.

. ஆனால் பிறகு வெப் சீரிஸ் எடுக்க விரும்பினேன் ஆனால் அதற்குள் மணி சார் அறிவித்து விட்டார் என கூறினார். ராஜமௌலி பல மாதங்களுக்கு முன்பு பேசிய அந்த பேட்டி தற்பொழுது இணையதள பக்கத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.