விஜய் நடித்த “நண்பன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது.? இந்த ஹீரோ தானாம்.? வெளிவந்த சூப்பர் தகவல்.

0

சினிமாவை உலகை பொறுத்தவரை பிறமொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 3 இடியட்ஸ் இந்த படத்தின் ரீமேக் தமிழில் செய்யப்பட்டது இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தமிழில் பெற்று இருக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தை எடுத்தார்.

இந்த படத்தில் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடித்து அசத்தினார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் பெரும்பாலும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர் மற்றும் மக்களுக்கு கொடுத்து வந்த நிலையில் நண்பன் திரைப்படத்திற்காக மட்டும் அவர் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடித்தார்.

ஏனென்றால் இந்த திரைப்படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு சண்டைக் காட்சிகளும் கிடையாது மேலும் வழக்கமான மாஸ் சீன்கள் எதுவும் இருக்காது. இவ்வாறு இருந்ததால் அவர் அப்படிப்பட்ட படத்தில் நடிக்க வேண்டியதாக போனதே இருப்பினும் அதிலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு மட்டும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தார்.

படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து . இந்த நிலையில் இப்படத்தை பற்றி ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் விஜய் இல்லையாம் பிரபல தெலுங்கு நடிகரான சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தான் நடிக்க இருந்தாராம்.

நண்பன் படத்தின் படக்குழு முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் அப்பொழுது அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் நடிகர் மகேஷ் பாபு. இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.