ஆரம்பத்திலேயே அம்மா ரோலில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகைகளுக்கு சமமாக நடித்து வருபவர் ஸ்ரீதிவ்யா ஆம் இவர் தனது மூன்று வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார் என்று கூட கூறலாம் இவர் மூன்று வயதில் தெலுங்கில் கிட்ட திட்ட பத்து படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து கதாநாயகியாக பல நடிகர்களுடன் நடித்து வளம் வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு மனசார என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அதனை தொடர்ந்து இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழில் பல நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சூரி,ஷாலு,ஷம்மு போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் ஸ்ரீதிவ்யா ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

sri divya2
sri divya2

மேலும் இவர் தற்பொழுது பானா காத்தாடி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எப்போது எடுப்பார்கள் என அவரது ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

sri divya
sri divya

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே ஒரு சீரியலில் நடித்துள்ளாராம் ஆம் Thoorpu Velle Railu என்ற சீரியலில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளாராம் அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நீங்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர் தானா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment