விடுதலை படத்தின் முதல் விமர்சனம்.. பாசிட்டிவா.? நெகட்டிவா.?

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் கடைசியாக தனுஷை வைத்து எடுத்த அசுரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, சூரி போன்றவர்களை வைத்து எடுத்துள்ள விடுதலை திரைப்படம்.

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது முதல் பாகம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் ஒரு பிரச்சினையை தான் படமாக எடுத்துள்ளது எனவே இந்த படத்தில் ஆக்சன், செண்டிமெண்ட் போன்றவை அதிகம் இடம் பெறும் என தெரிய வருகிறது.

படத்தில் சூரி, விஜய் சேதுபதி உடன் கைகோர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பிரகாஷ் ராஜ், ராஜூவ் மேனன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஆர் வேல்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர். படம் வெளிவர இரண்டு, மூன்று நாட்களில் இருப்பதால் விடுதலை..

படம் குறித்து பல தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் வித்தலை படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒரு விமர்சனம் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விடுதலைப் படத்தின் முதல் பாகம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மீண்டும் ஒரு வெற்றி படத்தை வெற்றிமாறன் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் படத்தை முழுவதும் பார்த்துவிட்டு வெளியே வந்த இளையராஜா நடிகர் சூரியின் நடிப்பு பிரமாதம் எனக் கூறி பாராட்டி இருக்கிறாராம்.  முதல் விமர்சனமே விடுதலை படத்திற்கு பாசிட்டிவாக வந்துள்ளதால் நிச்சயம் இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என சொல்லப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

Leave a Comment