யோகி பாபு, மஞ்சுவாரியார் ஆகியோர்கள் நடித்துள்ள சென்டிமீட்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

yoki
yoki

தமிழ், மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கிய நடிகராக பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம். இவர் நடிப்பில் கடைசியாக நெட்ப்ளிக்ஸ்சில் வெளியான பாவ கதைகள் வெப் சீரியல் இடம்பெற்றிருந்த தங்கம் என்ற எபிசோடின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவ்வாறு இவர் பிரபலமாக இருப்பதால் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு பெற்று வருகிறார். அந்த வகையில் தமிழில் முக்கிய இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமலஹாசனை வைத்து உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 3ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ்சாக உள்ளது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடிக்க உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இயக்குனரான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகியிருக்கும் ஜாக் அண்ட் ஜில் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சுவாரியார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இத்திரைப்படத்தினை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சேவாக் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள சோபின் சாகிர்,நெடுமுடி வேணு,  அஜீ வர்கீஸ், ஷைலி கிரிஷன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஜெக்ஸ் பிஜாய், ராம் சுந்தர் மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இப்படம் தற்போது தமிழில் சென்டிமீட்டர் என ரிலீசாக இருக்கிறது தமிழில் முக்கிய வேடத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது சென்டிமீட்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது விரைவில் ட்ரைலர் வெளியாக இருக்கிறது.