வாழ்நாள் கனவு பலித்தது!! வெளிவந்தது VJ சித்ரா ஹீரோயினாக நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!! இதோ..

The first look poster of the movie Calls starring released late vj Chitra as the heroine:தற்போது பெரும்பாலான ரசிகர்களின் புலம்பலில் முதலிடத்தில் இருப்பது விஜே சித்ராவின் இழப்பு தான் அந்த அளவுக்கு குடும்பத்தார்கள், ரசிகர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்தரை என அனைத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது எனக் கூறலாம்.

பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தது மட்டுமல்லாமல் மாடலிங், விளம்பரபடங்கள், ரியாலிட்டி ஷோ மற்றும் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இவரின் இறப்பிலிருந்து ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என இன்னும் பலரும் மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவரின் நீண்டகால கனவான இவர் ஹீரோயினாக நடித்த காலஸ் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தை சபரீஷ் என்பவர் இயக்கியுள்ளார்.  இப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதை இவரால் பார்க்க முடியாததை எண்ணி ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்தும் அவரை பாராட்டியும் வருகின்றனர்.

calls-firstlook
calls-firstlook

Leave a Comment