வெற்றிமாறன் சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.!

வெள்ளித்திரையில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகனாக தனது முகத்தை பதிய வைத்து அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தனது காமெடி திறனை இயல்பாக காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் சூரி.

இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கும் போது இவருக்கு ரசிகர்கள் பரோட்டா சூரி என்று பெயரை வைத்துவிட்டார்கள் அதிலிருந்து தற்போது வரை பரோட்டா சூரி என்றுதான் கூப்பிட்டு வருகிறார்கள்.மேலும் அஜித்,விஜய்,சூர்யா,அதர்வா,விமல்,விஷால் போன்ற பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

இவ்வாறு காமெடியனாக வலம் வந்த சூரி கதாநாயகனாக வலம் வரத் தொடங்கியுள்ளார் ஆம் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது அந்தத் திரைப்படத்திற்கு விடுதலை என்ற தலைப்பை வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்து வருகிறார் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தால் சூரி கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார் இதை வைத்து பார்க்கும் போது சூரி அதில் காவல் துறையில் வேலை பார்க்கிறார் என்பது போல் தெரிகிறது.

மேலும் சூரி நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பல வருடங்களாக காமெடியனாக நடித்து வந்த உங்களுக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment