சர்வதேச போட்டியில் 500 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர்.. யாருன்னு தெரிஞ்சா கொண்டாடுவீங்க..

rohit sharma

இந்திய அணியில் நல்ல வீரர்கள் இருந்தாலும் அண்மைக்காலமாக சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக ஜொலிக்கவில்லை அதனால் ஒரு சில தொடர்களில் கோபையை கைப்பற்றாமல் திணறி வருகிறது. குறிப்பாக 20 ஓவர் உலககோப்பை, ஆசிய கோப்பை, நியூசிலாந்து அணி உடனான ஒரு நாள் தொடர் இப்பொழுது வங்கதேச ஒரு நாள் தொடரையும் இழந்துள்ளது.

நேற்று வங்கதேச அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது இதில் வங்கதேச அணி 271 ரன்கள் எடுத்து அசத்தியது. இலக்கை துறத்தி இந்திய அணி விளையாண்டது ஓப்பனராக ரோகித் சர்மா களம் இறங்கவில்லை ஏனென்றால் அவர் பில்டிங் செய்யும் பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது அதனால் தொடக்க வீரராக ஸ்ரீகார் தவானுடன், கோலி களம் இறங்கினார்.

இருவருமே சொற்பொருள்களில் வெளியேறினார் பிறகு வந்தவர்களும் சொல்லிக் கொள்ளும்படி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை ஆனால் ஒரு பக்கம் ஐயர் பொறுமையான ஆட்டத்தை வெளியப்படுத்தி 80 ரன்களுக்கு மேல் அடித்தார் கடைசியா கட்டத்தில் ரோகித் சர்மா காயத்தையும் பொருள்படுத்தாமல் விளையாண்டார் அவர் 28 பந்துகளில் 5 சிக்ஸர் 3 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும் கடைசி ஓவரில் ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்படும் போது அவரால் அடிக்க முடியாமல் போனது இதனால் இந்திய அணி போராடி தோற்றது இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார். அவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

rohit sharma
rohit sharma

ஒரு நாள் போட்டியில் 256 சிக்ஸர்களும், 20 ஓவர் தொடரில் 182 சிக்ஸர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 553 சிக்ஸர்கள் அடித்து மேற்கிந்திய தீவு வீரரான கிறிஷ் கேயில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரோகித் ஷர்மா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.