நடிகர் விஜய் சேதுபதி ஒரு வருடத்தில் அரை டஜன் திரைப்படங்களில் நடித்து ரிலீஸ் செய்து வருபவர். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பார்கள் ஆனால் விஜய் சேதுபதி வேற ராகம் என நிரூபித்தவர்.
விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த பிறகு விஜய்சேதுபதியின் கேரியர் வேற லெவல் என்று கூறுகிறது சினிமா வட்டாரம். தற்போது விஜய்சேதுபதி தெலுங்கு ஹிந்தி என மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறார் அது மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தெலுங்கில் உப்பெண்ணா என்ற படத்தில் ஹீரோயினுக்கு தந்தையாகவும், வில்லனாகவும் நடித்து இருந்தார் ராயணம் என்ற கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் தெலுங்கில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அறிமுக நடிகர் வைஷ்ணவ் தேஜ் அவர்களுக்கு 100 கோடி வசூல் திரைப் படமாக அமைந்துவிட்டது.
முதல் திரைப்படமே மிகப்பெரிய லாபத்தை பெற்று கொடுத்ததால் இவரின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது இவருக்கு ஜோடியாக 17 வயதான கீர்த்தி ஷெட்டி என்ற நடிகை நடித்திருந்தார் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். இந்த திரைப்படத்தை புஜ்ஜி பாபு என்பவர் தான் இயக்கியிருந்தார்.
இவர் இதற்கு முன் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனரிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர். உப்பெண்ணா திரைப்படம் 100 கோடி வசூல் செய்து அதை தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இயக்குனருக்கு 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக கொடுத்துள்ளது அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
