“டான்” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் அள்ளிய முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நேற்று டான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பலரும் நடித்திருந்தனர்.

படம் வெளிவருவதற்கு முன்பே டான் படத்தில் இருந்து ஒரு சில பாடல்கள் மற்றும் டிரைலர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே டான் படம் அதிக திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றன. முதல் நாளே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படத்திற்கு எவ்வளவு வரவேற்பு இருக்குமோ அதே போல சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் அமோகமாக கட்டவுட்டுக்கு  பாலாபிஷேகம் செய்து பட்டாசுகளை வெடித்து முதல்நாள் காட்சியை  செம்ம மாஸாக என்ஜாய் செய்து பார்த்தனர்.

இந்த நிலையில் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் எதிர்பாராத அளவு வசூல் வேட்டை நடத்திய நிலையில் டான் படமும் நல்ல வசூல் நடத்தும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். அதைப்போலவே தற்போது டான் திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூல் நடந்தி வருகிறது.

அதன்படி டான் படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலில் 9 கோடி வசூலை ஈட்டியது. இது இந்த படத்திற்கு நல்ல ஆரம்பம் என்றுதான் சொல்லவேண்டும். நாட்கள் செல்ல செல்ல டான் படம் பலகோடி வசூலை ஈட்டும் என ரசிகர்கள் முதல் படக்குழு வரை பலரும் எதிர்பார்க்கின்றனர்.