நடிகர் சூர்யா சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக மார்ச் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன் வினய், சத்யராஜ் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கொண்ட வைத்த நிலையில் படத்தை பார்க்க ரெடியாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இளம் நடிகர் ஒருவர் தவிர்த்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றவர் ஆரவ். மாடலிங் துறையிலிருந்து பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரைக்கு வந்தவர்.
முதலில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இப்பொழுது நடிகர் ஆரவ். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தின் கதைக்காக தனது உடம்பை தாறுமாறாக எற்றி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் அவருக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் வாய்ப்பு வந்தது நடிகர்சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு முதலில் நடிகர் ஆரவ் – வுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் படங்களில் நடித்து வருகிறார் அந்த காரணத்தினால் ஆரவ் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.