படம் மாபெரும் ஹிட் தான் ஆனா படத்தை தயாரித்தவர் டி நகர் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தார்.!

2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக்கிய திரைப்படம் தான் வின்னர் இந்த திரைப்படத்தை சுந்தர் சி எழுதி இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார், எம் என் நம்பியார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வின்னர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ள பிரசாந்த் தன்னுடைய தாத்தா பாட்டி கிராமத்திற்கு வருவார் அவர் அங்கு வருவது அதுதான் முதல் முறை ஏனென்றால் தாத்தாவுக்கும் தந்தைக்கும் மனஸ்தாபம் அதனால் நீண்ட காலம் தாத்தாவை பார்க்க யாருமே வராமல் இருப்பார்கள் ஆனால் முதன் முறையாக பிரசாந்த் வருவார். அதேபோல் பிரசாந்த் நடித்த செம்பருத்தி திரைப்படத்தின் கதையும் இதுதான்.

செம்பருத்தி திரைப்படத்தில் பாட்டி பேரனை அவ்வளவு எளிதில் சேர்த்துக் கொள்ள மாட்டார் ஆனால் வின்னர் திரைப்படத்தில் பேரன் என்று தெரிந்ததும் அரவணைத்துக் கொள்வார். அதே போல் செம்பருத்தி திரைப்படத்தில் மீனவ பெண்ணாக ரோஜா பானுமதி வீட்டில் தங்கி இருப்பார் அவருடன் பிரசாந்துக்கு காதல் ஏற்படும் ரோஜாவுக்கு நிச்சயதார்த்தம் செய்த மன்சூர் அலி கான் தான் பிரச்சனை செய்வார்.

அதேபோல் வின்னர் திரைப்படத்தில் வில்லன் ரியாஸ் காணுக்கு நிச்சயதார்த்தம் கிரனுடன் ஆனால் பிரசாந்துக்கு காதல் ஏற்படும் இந்த இரண்டு திரைப்படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் ஆனால் இந்த திரைப்படத்திற்கு வித்தியாசத்தை கொடுத்தது  வடிவேலின் காமெடி தான். வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் வின்னர் திரைப்படத்திற்கு உயிர் கொடுத்தது என்றே கூறலாம் அந்த அளவு அவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

வின்னர் திரைப்படத்தில் முதல் முதலாக கிரண் கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்க வைக்க வேண்டும் என பிரசாந்தின் தந்தை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இதனால் தயாரிப்பாளர் உடன் மோதலும் ஏற்பட்டதாக அப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வந்தது. அது மட்டும் இல்லாமல் பிரசாந்துக்கு பேசிய தொகையை விட அதிகமாக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கிரண் வேடத்தில் முதலில் குஷ்பூவால் பரிந்துரைக்கப்பட்டவர் சோனியா அகர்வால்.

ஆனால் கமர்சியல் ஹிட் கொடுப்பதில் சுந்தர்சியை அடித்துக் கொள்ள முடியாது அதனால் ஹீரோயினாக மனைவி பேச்சை கூட கேட்காமல் கிரனை நாயகியாக மாற்றினார். அதேபோல் பின்னர் திரைப்படத்தில் வடிவேலுக்கு காலில் அடிபட்டிருந்ததால் என்னால் எப்படி நடிக்க முடியும் என வடிவேலு கேட்டார் ஆனால் சுந்தர் சி உங்களைத் தவிர வேறு யாரு நடிச்சாலும் பொருத்தமாக இருக்காது எனக் கூறி.  முதல் காட்சியில் கட்டத்துரையிடம் கைப்புள்ள அடி வாங்குவது போல் எடுத்தார்.

அதே போல் கைபுள்ள காலில் அடிபட்டது போல் நொண்டி நொண்டி நடக்க வைத்தார் ஆனால் உண்மையாலும் வடிவேலுவுக்கு அடிபட்டிருந்ததால் அப்படி நடப்பார் அந்த நடிப்பே படத்திற்கு உயிர் கொடுத்தது. இந்த திரைப்படம் வெளியாகி பிரசாந்த் அவர்களுக்கு நல்ல மார்க்கெட் கிடைத்தது ஆனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிரசாந்த் அவர்களுக்கு மார்க்கெட்டே கிடையாது.

தயாரிப்பாளரும் நஷ்டத்தில் தான் படத்தை விற்றார் ஆனால் எதிர்பாரா விதமாக இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  முக்கியமாக இந்த திரைப்படம் வடிவேலு காமெடியால் தான் ஹிட்டானது வின்னர் திரைப்படத்தை பார்க்காதவர்கள் கூட அதில் வரும் காமெடி காட்சிகளை பலமுறை பார்த்து ரசித்தார்கள் அதேபோல் இந்த திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நன்றாக சம்பாதித்தார்கள் வின்னர் காமெடிகள் youtubeிலும் அதிகமாக பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நஷ்டமாகி சென்னை டிநகரில் பிரபல ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தார். அதன் பிறகு வெளிநாடுகளில் உள்ளது போல் இந்தியாவிலும் காப்பிரைட் சிஸ்டம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருந்தால் தயாரிப்பாளர் பல கோடிகளை சம்பாதித்து இருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் அப்படி எதுவும் கிடையாது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம்.

இன்றுடன் வின்னர் திரைப்படம் வெளியாகி 19 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

Leave a Comment