விஜயகாந்திற்காக ரஜினி விட்டுக் கொடுத்த திரைப்படம்..சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தரமான சம்பவம்..

நடிகர் விஜயகாந்த் இறந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது அதனால் பொதுமக்கள் பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் நடிகர் நடிகைகள் என பலரும் விஜயகாந்தை நினைத்து மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விட்டுக் கொடுத்த திரைப்படம் பற்றி தெரியவந்துள்ளது. ஒரு கதையை ரஜினியிடம் சொல்ல சென்றுள்ளார்கள் அப்பொழுது ரஜினி இந்த கதையில் விஜயகாந்த் நடித்தாள்  அருமையாக இருக்கும் என கூறியுள்ளாராம்.

உடனே விஜயகாந்திடம் சென்று கால்ஷீட் வாங்கிய பட குழு படத்தையும் எடுக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ரஜினி முன்கூட்டியே இதைக் கூறியிருந்தார் அதனால் படம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது மேலும் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக முதன்முறையாக விமானத்தில் சென்றுள்ளார்.

படத்தை கலைபுலி தானு அவர்கள் தயாரித்திருந்தார் படம் ஹிட் அடித்ததும் சம்பளமாக விஜயகாந்திற்க்கு கொடுக்க சென்றுள்ளாராம் அப்பொழுது நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் போதும் சம்பளம் எதுவும் தேவையில்லை என பெருந்தன்மையாக விஜயகாந்த் மறுத்துவிட்டாராம் அதன் பிறகு எஸ் கலைப்புலி தாணு  தயாரிப்பில் பல திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் திரையுலகினருக்கு எந்த கஷ்டம் என்றாலும் முதல் ஆளாக ஓடி வந்து உதவி செய்வாராம் விஜயகாந்த் இதை பாலமுறை பலபேர் சொல்லி நாம் கேட்டுள்ளோம்.