விடாமல் துரத்தும் வாரிசு படம்..! வம்சி செம்ம கோபத்தில் இருக்கும் விஜய்..

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருக்கிறார் இவர் இப்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படம் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் ஆக உருவாக்கி வருகிறது..

இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதை படக்குழுவும் உறுதி செய்து இருக்கிறது..

இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு மூன்று போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது அதாவது இயக்குனர் வம்சி விஜயின் கால்ஷீட் இன்னும் 18 நாட்களில் வேண்டுமென கேட்டு இருக்கிறாராம் காரணம் இன்னும் சில காட்சிகளை எடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறாராம்..

இதனால் கடுப்பான போயிருக்கிறார் விஜய் காரணம் இந்த படத்தை வெகு விரைவிலேயே முடித்துவிட்டு சீக்கிரம் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து அடுத்த படம் பண்ண விஜய் திட்டமிட்டு இருந்தார் இப்பொழுது 18 நாட்கள் கால்ஷீட் கேட்டிருப்பது அவருக்கு சற்று கோபத்தை உண்டாக்கி இருக்கிறதாம்..

வேறு வழி இல்லாமல் படம் நன்றாக வர வேண்டும் என்றால் இயக்குனர் சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டும் என்ற காரணத்தினால் விஜய் நடித்து வருகிறாராம் படத்தை முடித்துவிட்டு உடனே லோகேஷ் உடன் அவர் கை கோர்ப்பார் என தெரிய வருகிறது.. லோகேஷ் அனைத்து வேலைகளையும் தயார் செய்து வைத்து இருக்கிறாராம் விஜய் வந்தால் உடனே படத்தை எடுக்கவும் அவர் ரெடியாக இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன..

Leave a Comment

Exit mobile version