திடீரென AK62 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் சமீபத்தில் ott-யில் ரிலீஸ் ஆன பிறகு இந்தியாவில் டாப் லிஸ்டில் மூன்று மற்றும் நான்கு ஆகிய இரண்டு இடங்களையும் பிடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பிறகு இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது இதனை தொடர்ந்து இந்த படத்தை தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதை உறுதி செய்யும் விதமாக அஜித் மற்றும் மகிழ் திருமேனி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.

ஆனால் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் படபிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் லைக்கா நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஏகே 62 திரைப்படம் குறித்து அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படகுழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகு படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது திடீரென எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள் இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி இருக்கிறது.

இதனை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்தடுத்த அப்டேட்டை பட குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment