விஜய் வேண்டா வெறுப்பாக நடித்த படம் இன்று சூப்பர் ஹிட்.! உண்மையை உடைத்த பிரபலம்…

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனராஜ் அவர்களுடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் விஜயின் தந்தை எஸ் ஜே சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய மகன் தான் தேர்ந்தெடுத்த ஒரு திரைப்படத்தில் வேண்டாவெறுப்பாக நடித்து  கொடுத்து உள்ளார். அனால் அந்த படம் மாபெரும் ஹிட் ஆகியிருக்கிறது என்று கூறி நெகிழ்ந்து இருக்கிறார்.

அதாவது ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜயின் படங்கள் சரியாக போகாமல் இருந்தாலும் வெற்றி பெற்றுவிடும் அப்படி இருந்த நிலையில் தான் அப்பா சொல்லும் படங்களில் கண்ணை மூடிக்கொண்டு நடித்து வந்த நடிகர் விஜய் ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தான் அப்பா கூறும் படங்களில் எதிலும் தற்போது அவர் நடிக்காமல் இருந்து வருகிறார் ஆனால் விஜயின் தந்தை எஸ் ஜே சந்திரசேகர் சொல்லக்கூடிய படத்தில் விஜய் அவர்கள் அமைதியாக நடித்து வந்தாராம் அப்படி நடித்த இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

ஆனால் அந்த இரண்டு படத்திலும் நடிகர் விஜய் அவர்கள் வேண்டா வெறுப்பாக தான் நடித்திருக்கிறார் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். அதாவது பிரியமானவளே படத்திலும் நினைத்தேன் வந்தாய் படத்திலும் நடிகர் விஜய் அவர்கள் வேண்டா வெறுப்பாக தான் நடித்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் எப்படியாவது நடிகர் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரிடம் பேசி இருக்கிறார்.

அதாவது இந்த படத்தில் நடித்தால் உன்னுடைய மார்க்கெட் கொஞ்சம் உயர்ந்து விடும் அது மட்டும் அல்லாமல் பெண்கள் மத்தியிலும் உன்னுடைய மதிப்பு உயர்ந்து விடும் என்று கூறி இருக்கிறார் அதன் பிறகு இவர் நடித்த பிரியமானவளே மற்றும் நினைத்தேன் வந்தாய் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது என்று கூறியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

Leave a Comment

Exit mobile version