ரஜினி வேண்டா வெறுப்பாக நடித்த திரைப்படம்.. வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்.! வெள்ளி விழா கொண்டியது

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் முதலில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாக தான் தனது பயணத்தை ஆரம்பித்தார். பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார் அன்றிலிருந்து இன்று வரையிலுமே வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகிறார் அந்த வகையில் தற்போது நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரஜினி நம்பி இருக்கிறார் காரணம் கதை கேட்கும் போதே ரஜினிக்கு தெரிந்து விடுமாம் இந்த படம் ஹிட் அடிக்குமா? அடிக்காத என்று.?

பல படங்களில் கதை கேட்டு நடித்த ரஜினி ஒரு படத்தில் மட்டும் கதை கேட்காமல்  வேண்டா வெறுப்பாக நடித்துள்ளார் அந்த படம் வெளிவந்து என்ன ஆனது என்பது குறித்து தற்பொழுது பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டவர் ஆர் சுந்தரராஜன் இவர் விஜயகாந்தை வைத்து அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தால் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார்.

மேலும் நடிகர் மோகனை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்தவரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர் சௌந்தர்ராஜன் எந்த ஒரு ஹீரோவோடவும் முழு கதையை சொல்லுவதே கிடையாது அப்படி தான் ரஜினியிடம் முழு கதையை கூறாமல் “ராஜாதி ராஜா” என்னும் படத்தை எடுத்து வந்தார். படப்பிடிப்பின் பொழுது இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ரஜினியை மதிக்கவே மாட்டாராம்.

ரஜினியும் படத்தில் கமிட் ஆகிய விட்டோம் வேறு வழியில்லாமல் நடித்துக் கொடுக்கலாம் என வேண்டா வெறுப்பாக நடித்துள்ளார். சுந்தரராஜன் எடுக்கும் காட்சியையும் ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் இதனால் ராஜாதி ராஜா படம் வெற்றி பெறாது என மனதிற்குள் ரஜினி நினைத்துக் கொண்டாராம் ஆனால் படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்தது முதல் நாள் மட்டுமே 94 லட்சம் வசூல் செய்ததாம்.

அடுத்த அடுத்த நாட்களில் இமாலய   வசூலை அள்ளியது ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 16 கோடிக்கு மேல் அப்பொழுதே வசூல் செய்து அசத்தியதாம்.. மேலும் சென்னை, தென்காசி போன்ற இடங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழா கண்டது ராஜாதிராஜா திரைப்படம். ரஜினி ஓடாது என நினைத்த   ராஜாதி ராஜா  படம் இப்பொழுது வரை ரஜினி கேரியரில் பெஸ்ட் படமாக இன்று வரையிலும் இருந்து வருகிறதாம்..

Leave a Comment