ஹ ச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் வலிமை திரைப்படம். இந்த படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் ஒருவழியாக மிகப்பெரிய லெவலில் படத்தை எடுத்து முடித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதிய கெட்டப்பில் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ போன்றவை வெளிவந்து மக்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது போதாகுறைக்கு இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் வலிமை படத்தை பற்றி புகழ்ந்து பேசுவது உலகத்தரத்தில் ஒரு ஆக்சன் திரைப்படமாக இது இருக்கும் என கூறி வருகின்றனர் இதனால் தல ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
ஆனால் இந்த திரைப்படம் அடுத்த வருடமும் பொங்கலுக்குத்தான் வெளியாக இருக்கிறது இருப்பினும் ரசிகர்கள் இவ்வளவு வருடம் பொறுத்துவிட்டோம் இன்னும் ஒரு ரெண்டு மாசம் வெயிட் பண்ண மாட்டோமா என கூறி காத்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை படத்தில் அஜித்துடன் கைகோர்க்கும் கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போலீஸ் மற்றும் பைக் ரேஸ் வைத்து படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிதும் ஆக்சன் சீன்கள் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு சோலோவாக களமிறங்கும் என எதிர் நோக்கி இருக்கின்றனர் ஆனால் தற்போது வந்த தகவலின் படி சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது இதனால் இந்த திரைப்படமும் போஸ்ட் பிரமோஷன் வேலைகளை முடித்துவிட்டு பொங்கலுக்கு இந்த திரைப்படத்தை வெளியிட இருப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.