படம் பிளாப் தான்..? பில்லா 2 பட சாதனையை முறியடிக்க முடியாமல் இன்றுவரை தடுமாறும் ரஜினி, கமல்.! திரையரங்கம் போட்ட ட்வீட்.

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் வலிமை திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருந்தது இந்த படம் நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார்.

இந்த படம் பேங்க் ராபரியை மையமாக வைத்து கதை உருவாகி வருகிறதாம் இந்த படத்திலும் ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது சூட்டிங் புனேவில் எடுக்கப்பட உள்ளதாம்.

அஜித்துடன் இணைந்து சமுத்திரகனி, மஞ்சு வாரியர், வீரா, ஜான் கோக்கின் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இது இப்படி இருக்க அஜித் நடித்த பில்லா 2 படம் குறித்து தற்பொழுது ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் பில்லா இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் அதிரடியாக உருவானது.

இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டாலும் படம் எதிர்பார்த்தது போல் இல்லாததால் இந்த படம் வெற்றியை பெற தவறியது இருப்பினும் அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடித்து போய் இருந்தது.

பில்லா 2 திரைப்படம் முதல் வார முடிவில் மட்டுமே மிகப்பெரிய ஒரு சாதனையை செய்துள்ளது அதாவது  சென்னையில் உள்ள மாயாஜாலில் ஏகப்பட்ட திரையரங்குகள் இருக்கின்ற. பில்லா 2 முதல் வார இறுதியில் சுமார் 112 திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. பில்லா 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment